மாரியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2021 10:10
காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த அக்.10 ஆம் தேதி கணேசபுரம் மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு முதல் நாள் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அன்னபூரணி, காமாட்சி, மகாலட்சுமி, சிம்மவாகினி, வனதுர்க்கை அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணேசபுரம் மாரியம்மன் கோயில் டிரஸ்ட் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் செய்திருந்தனர்.