திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2021 10:10
திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ம் நாளன்று, சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் ஏழுமலையானுக்கு, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 7ம் நாளான நேற்று சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வாகன சேவைகளில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.