செஞ்சி: காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலல் 103 வது ஆராதனை விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் பாபாவின் 103 வது ஆராதனை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் 11 மணி வரை பக்தர்களின் கரங்களால் கருணா சாயி பாபாவிற்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், புஷ்பாஞ்சலியும், மகா ஆராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.