திருப்பதி பெரிய ஜீயர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2021 04:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலா உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி பெரிய ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகள் மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஐப்பசி மாதம் கங்கை உள்ளிட்ட இந்தியாவின் புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் சங்கமம் ஆகி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதனை முன்னிட்டு ஐப்பசி மாதம் காவிரியில் புனித நீராடுவது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இன்றைய ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருப்பதி பெரிய ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகள் காவிரி துலா ஸ்நானம் மேற்கொண்டு 108 வைணவ திவ்ய தேசங்களில் இருபத்தி இரண்டாவது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது தொடர்ந்து பரிமள ரங்கநாதர் பரிமள ரங்கநாயகி தாயார் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் செய்த சுவாமிகள் ஆஞ்சநேயர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.