பழநி: பழநியில் கொரோனா தளர்வுகளுக்கு பின் கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று விடுமுறை நாளை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். ரோப், வின்ச் ஸ்டேசனில் வரிசையில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். படிப்பாதை, ரோப், வின்ச் வழியே பக்தர்கள் மலை மீது சென்று பழநி ஆண்டவரை தரிசித்தனர். கிரிவீதிபகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.