பந்தலூர் முருகன் கோவிலில் காய்கறி அலங்காரத்தில் சிவன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2021 06:10
பந்தலூர்: பந்தலூர் முருகன் கோவிலில் நடந்த. அன்னபிஷேக பூஜையில், காய்கறிகள், பிஸ்தா அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பந்தலூர் முருகன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, சிவபெருமானுக்கு அன்னபிஷேக பூஜை நடத்தப்பட்டது. இதில் காய்கறிகள் மற்றும் பிஸ்தாக்களால் சிவன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து கோவில் குருக்கள் ரமேஷ் தலைமையிலான அர்ச்சகர்கள் பூஜை செய்தனர். மேலும் பக்தர்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ், நிர்வாகிகள் மகேந்திரன், வாசு, ரவி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் திருப்பணி நடப்பதால் பக்தர்கள் பொருளுதவி தர கமிட்டி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.