Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 56 நாடுகளில் முருக பக்த மார்க்கம் ... அபிஷேக பிரியனுக்கு அன்னாபிஷேகம்: சிவாலயங்களில் பக்தர்கள் பரவசம் அபிஷேக பிரியனுக்கு அன்னாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல நடவடிக்கை
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல நடவடிக்கை

பதிவு செய்த நாள்

21 அக்
2021
10:10

மதுரை, : மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி, கேமரா கொண்டு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். மதுரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், என, மதுரையில் மாவட்ட நகர் ஊரமைப்பு சார்பில் நடந்த மாஸ்டர் பிளான் கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், எம்.பி., வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் உதயகுமார், ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், அய்யப்பன், தளபதி, வெங்கடேசன், போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, எஸ்.பி., பாஸ்கரன், நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் விஜயன், அதிகாரிகள், தொழில், வர்த்தக சங்கத்தினர் பங்கேற்றனர். டூவீலர்கள் பயன்பாடு அதிகம்கலெக்டர் பேசியதாவது: சென்னையில் 29.6 சதவீதம் டூவீலர்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மதுரையில் 43 சதவீதம் டூவீலர்கள் பயன்பாட்டில் உள்ளன. சென்னையை விட மதுரையில் 13.4 சதவீதம் இது அதிகம். அந்தளவுக்கு ரோடுகள் உள்ளன என பிளானில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் சுற்றுலா பயணிகள் வருகை 48.04 சதவீதம் குறைந்துள்ளது. 2016க்கு பிறகு மதுரை வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: 25 கி.மீ., சுற்றளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். புதியதாக சுற்றுச்சாலைகள் அமைத்து அருகில் தொழில்வளர்ச்சியும் ஏற்படுத்தப்படும். விமான நிலையத்தை தரம் உயர்த்த 600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்படவுள்ளன.

கிரானைட் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் என்றார்.தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் மட்டுமே அலைபேசி, கேமரா எடுத்து செல்ல தடையுள்ளது. 2018 கோயிலில் தீ விபத்து நடந்ததற்கு பின், நீதிமன்ற தடையால், அவற்றை எடுத்து செல்ல முடியவில்லை. எனவே சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு அவற்றை எடுத்து செல்ல முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.எம்.எல்.ஏ.,க்கள் கேள்விமாஸ்டர் பிளானில் உசிலம்பட்டியை தவிர்த்திருப்பது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் உதயகுமார், அய்யப்பன் கேள்வி எழுப்பினர். உசிலம்பட்டிக்கு தனியாக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உசிலம்பட்டியை இணைத்து பிளான் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.மறுசீராய்வு செய்யப்படுமாதமிழ்நாடு தொழில், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் அளித்த மனுவில்,உள்ளூர் திட்ட குழுமம் மாஸ்டர் பிளானை மறு ஆய்வு செய்யாததால் தொழில், வணிகத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் சீரான வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தரப்பு கருத்து கேட்டு மாஸ்டர் பிளான் மறு சீராய்வு செய்யப்பட்டால் தொழில்,வணிகம் வளரும், என கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar