குன்னூர்: குன்னூர் மவுன்ட் ரோடு அருகேயுள்ள விநாயகர் கோவிலில், சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தை தொடர்ந்து அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. அர்ச்சகர் மணி குருக்கள் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை அறநிலைய துறை, கோவில் கமிடடியினர், பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடந்தது.