பதிவு செய்த நாள்
21
அக்
2021
03:10
கோவை: கணபதியில் உள்ள கோவிலின் சுற்றுச்சுவர், மழையால் இடிந்து விழுந்தது. கணபதி, கட்டபொம்மன் வீதியில், கருப்பராயன் கோவில் உள்ளது. மரத்தடியில் உள்ள இக்கோவிலை சுற்றிலும், சுற்றுச்சுவர் அமைத்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு, கருப்பராயன் கோவில் சுற்று சுவரின் ஒரு பகுதி, திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில், அப்பகுதியில் யாரும் இல்லாததால், எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அகற்றி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.