பதிவு செய்த நாள்
30
ஜூன்
2012
10:06
பெரியகுளம்: பெரியகுளம் கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள மலைமேல் கைலாசநாதர் கோயில் பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் புதிதாக ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு கைலாசநாதர், பெரியநாயகி, விநாயகர், முருகன் சன்னதிகள், நவக்கிரக மண்டபம், பரிவார தேவதைகளான சப்தமாதர், சூரிய சந்திரர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், கோஷ்ட தேவதைகளின் திருமேனிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கும்பாபிஷேகம் பூஜ்யஸ்ரீ. ஓங்காராநந்தா சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுருவித்யாலயம் தலைமை குருக்கள் எஸ்.கே.ராஜா பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கலெக்டர் பழனிசாமி, பிரவீண்குமார் அபினபு எஸ்.பி.,, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்க. தமிழ்செல்வன். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, நகராட்சி தலைவர்கள் சிவக்குமார், ஓ.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் செல்லமுத்து, அம்சகோமதி, பெரியகுளம் ஒன்றிய பொருளாளர் சின்னசாமி, வடபுதுப்பட்டி கிளை செயலாளர் அன்னபிரகாஷ், பேரூராட்சி தலைவர்கள் ராமதண்டபாணி, ஈஸ்வரி. கீழவடகரை ஊராட்சி தலைவர் லட்சுமிதங்கபாண்டியன், எல்.ஐ.சி., நாகராஜன்,வர்த்தக பிரமுகர்கள் திருவேங்கடசாமி, செல்வராஜ், மகேந்திரன்,ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தலைவர் பிரகாஷ்,தேனி வர்த்தக பிரமுகர்கள் சர்வேஸ்வரராஜா, சன்னாசி, பாண்டியராஜன், முத்து கோவிந்தன், சுப்புராஜ், கவுமாரி சுதாகர்,லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஜெயபாலன், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் லோகிராஜன், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் சவீதா. அ.தி.மு.க., பிரமுகர் குருமணி, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் நாராயணசாமி, கெங்குவார்பட்டி அ.தி.மு.க., செயலாளர் காட்டுராஜா, முன்னாள் பெரியகுளம் ஒன்றிய சேர்மன் வைகைபாண்டி, திருப்பரங்குன்றம் தொழிற்சங்க இணை செயலாளர் பாண்டியராஜன், குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் நேருதாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் அமாவாசை, இளம்பெண்கள் பாசறை நிர்வாகி மிதுன்சக்கரவர்த்தி, தேனி ஒன்றிய இணை செயலாளர் மகாராஜன் அ.தி.மு.க., பிரமுகர் சப்பாணி, தேனி மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சரவணகுமார், தேவதானப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் சலீம்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராம ரிப்பு குழு பொறுப்பாளர்கள் ரவீந்திரநாத்குமார்,ஜெயபிரதீப், தலைவர் ஓ.ராஜா, செயலாளர் சிவக்குமார், ஆலோசகர் சி.சரவணன், ஓதுவார் தெய்வேந்திரன், பொருளாளர் பழனிச்சாமி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.