Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறநிலையத்துறையில் 50 சதவீதம் ... கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம் கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலுக்கு உற்சவர் சிலைகளுக்கு காரமடையில் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலுக்கு உற்சவர் சிலைகளுக்கு காரமடையில் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 அக்
2021
08:10

மேட்டுப்பாளையம்: அயோத்தி ராமர் கோவிலில், வைக்கப்பட உள்ள உற்சவர் சுவாமி சிலைகளுக்கு, காரமடை ஐயப்பன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது.

அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோவிலுக்கு, சென்னையில் ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய நான்கு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. ராமர் சிலை இரண்டேகால் அடியிலும், சீதை, லட்சுமணன் சிலைகள் இரண்டு அடியிலும், ஆஞ்சநேயர் சிலை ஒரு அடியிலும் என, ஐம்பொன்களால் இந்த சுவாமி சிலைகள் செய்யப்பட்டன. இந்த சுவாமி சிலைகள், தமிழகம் முழுவதும், 25 கோவில்களில் வைத்து அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, நேற்று காரமடையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, இந்த நான்கு சுவாமி சிலைகளும் கொண்டு வரப்பட்டன. கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் சுவாமி சிலைகளுக்கு செய்யப்பட்டன. இப்பூஜையில் சுவாமி சிலைகளை கோவில்களுக்கு எடுத்துச் செல்லும் அமைப்பின் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் பாலசுப்பிரமணியன் உட்பட, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்த சிலைகள் தமிழகத்தில் மேலும் பல்வேறு கோவில்களில் வைத்து பூஜை செய்த பின்பு, நவம்பர் மாதம் ராமேஸ்வரம் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar