தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் புதிய தரிசனம் நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2021 10:10
தட்சிண கன்னடா: தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் தரிசனம், மொட்டை அடித்தல், அருங்காட்சியகம் பார்வையிடுதலுக்கு புதிய நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.இந்நிலையில், நவம்பர் 4 க்கு பின், பக்தர்கள் தரிசனத்துக்கு புதிய நேரம் ஒதுக்கி கோவில் நிர்வாகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காலை 6:00 மணியிலிருந்து மதியம் 2:30 மணி வரையிலும்; மாலை 5:00 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். காலை 10:30 மணியிலிருந்து மதியம் 3:00 மணி வரையிலும்; இரவு 7:00 மணியிலிருந்து 9:00 மணி வரையிலும் அன்னதானம் வழங்கப்படும்.பக்தர்கள் காலை 9:00 மணியிலிருந்து பகல் 12:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரையிலும்; இரவு 7:00 மணியிலிருந்து 9:00 மணி வரையிலும், கோவில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்திக்கலாம். காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை, தர்மஸ்தலா அருங்காட்சியகம் திறந்திருக்கும். அது போன்று, காலை 8:30 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரையிலும்; மதியம் 2:00 மணியிலிருந்து இரவு 7:00 மணி வரையிலும் பழங்கால கார் அருங்காட்சியகத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.காலை 6:00 மணியிலிருந்து மதியம் 2:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 மணி வரையிலும் மொட்டை அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.