பதிவு செய்த நாள்
30
ஜூன்
2012
10:06
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் ஒக்கலிகர் காப்பு படவனவார் குல சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் "ஓம்சக்தி கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேகத்திற்கு ஒக்கலிகர் சங்க மாநில கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமை வகித்தார். நான்காம் கால யாகபூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 8.45 மணிக்கு தீர்த்த குடங்கள் கோயிலில் வலம் வந்தன. தேவகோட்டை பஞ்சநாதன் குழுவினர் வேத பாராயணங்கள் முழங்க காலை 9.20 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றினர். பக்தர்கள் "ஓம்சக்தி,"பராசக்தி கோஷம் எழுப்பி கோபுர தரிசனம் செய்தனர். தொடர்ந்து சவுடம்மனுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6 மணி முதல் அன்னதானம் நடந்தது.முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி அம்மனை வழிபட்டார். அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன், அறங்காவலர்கள் இளங்கோவன், சவடமுத்து, சவடப்பன், சங்க தலைவர் காளியாயி (எ) ராமசாமி,உறுப்பினர்கள் வேல்முருகன்,சவடமுத்து, நடராஜன், வைரவசாமி, பழனிக்குமார், முத்துச்சாமி, திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி ஆசிரியர் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.