Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... பண்ணாரி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் பெண்ணை அழைத்து வந்து சாப்பிட வைத்த அமைச்சர்
எழுத்தின் அளவு:
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் பெண்ணை அழைத்து வந்து சாப்பிட வைத்த அமைச்சர்

பதிவு செய்த நாள்

30 அக்
2021
03:10

மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சாப்பாடு வழங்காமல் அப்புறப்படுத்தினர் என புகார் கூறிய நரிக்குறவர் இன பெண்ணின் அருகில் அமர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, அன்னதானம் சாப்பிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தில், கோவில் ஊழியர் ஒருவர், நரிக்குறவ பெண்ணான அஸ்வினி என்பவருக்கு உணவு வழங்காமல் அவரை வெளியேற்றியதாக, அண்மையில் தகராறு ஏற்பட்டது. அந்த பெண் தனியார் யு டியூப் சேனலில் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் பரவியது.இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோருடன், ஸ்தலயனர் கோவிலுக்கு சென்று, சுவாமியை தரிசித்தார்.தொடர்ந்து, சிறப்பு சமபந்தி விருந்தாக பரிமாறப்பட்ட சாதம், வடை, பாயசம், கூட்டு என, நரிக்குறவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார்; அவர்களுக்கு புத்தாடை வழங்கினார்.நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது:இக்கோவில் அன்னதானத்தில் உணவு வழங்காமல் அலட்சியப்படுத்தியதாக, ஒரு பெண் கூறியிருந்ததை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதே பெண்ணை அழைத்து என் அருகில் அமரவைத்து, சமபந்தி சாப்பிட்டேன்.சென்னையில், அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட மூன்று கோவில்களை ஆய்வு செய்து, நான்காவதாக, இங்கு வந்தேன்.இந்த கோவில் திருப்பணிக்கு முதற்கட்டமாக, 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தனி செயல் அலுவலரை நியமிப்போம்.கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்களுக்கு நடத்தப்படும். வருமானம் இல்லாத உபகோவில்களின் நித்திய வழிபாட்டிற்காக, வருமானம் உள்ள பெரிய கோவில்களுடன் அவற்றை இணைக்கவும் ஏற்பாடு செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar