தூத்துக்குடி: எஸ்.கைலாசபுரத்தில் அன்பின் விருந்துடன் ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.எஸ்.கைலாசபுரம் பரி-திருத்துவ ஆலய 86வது பிரதிஷ்டை விழா நடந்தது. 28ம் தேதி இரவு 7 மணிக்கு ரெவரெண்ட் டேவிட் ராஜ் தேவ செய்தியுடன் ஆயத்த ஆராதனை நடந்தது.29ம் தேதி காலை சென்னை பெரம்பூர் சேககுரு ரெவரெண்ட் சார்லஸ் ஜெயக்குமார் தேவசெய்தியுடன் ஆராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு திருமுழுக்கு ஆராதனையும், மாலை 6 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு அன்பின் விருந்தும் நடந்தது.விழா ஏற்பாடுகளை சேகரகுரு ரெவரெண்ட் மர்காஷிஸ் டேவிட்வெஸ்லி, சேகர பொருளாளர் சாமுவேல் ரத்தினசாமி,செயலாளர் டேவிட் ஞானராஜ், எல்சிஎப் பொருளாளர் அகஸ்டின் சாமுவேல், சபை ஊழியர்கள் தேவபிச்சை, ஜெயபால் மற்றும் எஸ்.கைலாசபுரம் சபையினர் செய்திருந்தனர்.