பதிவு செய்த நாள்
30
ஜூன்
2012
10:06
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே அலிங்கியம் பத்ரகாளியம்மன், வீரமார்த்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.ஜூன் 25ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, கோ பூஜை, பிரவேசபலி, ர÷ஷாக்ன ஹோமம், 26ம் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், வாஸ்து சாந்தி, திக்பாலகர் வழிபாடு நடந்தது. 27ம் தேதி புனித நீர் கொண்டு வருதல், மங்கள இசை, புனித மண் எடுத்தல், முளைப்பாலிகை அழைத்தல் வருதல், கலசங்கள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி, பூர்ணாஹுதி நடந்தது. நேற்று முன்தினம் மங்கள இசை, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக வேள்வி, கோபுர கலசங்கள் வைத்தல், திரவ்யாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால யாக வேள்வி, விசேஷ அர்ச்சனை, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, உபசார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. நேற்று காலை, 6.30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வருண பகவான் பூஜை, நான்காம் கால யாக வேள்வி, நாடீசந்தானம், பட்டுப்புடவை சமர்ப்பித்தல், மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, காலை 9.15 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, ஆலய வலம் வருதல், காலை 9.40 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை திருப்பணிக் குழு தலைவர் சிவசாமி எம்.பி., விழா குழுத் தலைவர்கள் சுப்பிரமணியம், பழனிசாமி, பொருளாளர் பெருமாள்கவுண்டர் மற்றும் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.