திருப்பதி : திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று கோபூஜை நடத்தினார்.
திருப்பதியில் உள்ள கலையரங்கில் கோமாதாவின் பெருமையை உலகறிய செய்யவும், அவற்றை பூஜிப்பதால் ஏற்படும் புண்ணியத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தவும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோசம்மேளனம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் காஞ்சி மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று கபில பசு மற்றும் கன்றுக்கு கோபூஜையை விமரிசையாக நடத்தினார். இதில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், என, கோரிக்கை விடுத்தார்.