துாத்துக்குடி : கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில், தபசு காட்சியில் அம்பாள் எழுந்தருளினார். இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கோவில்பட்டி ண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கடந்த 21ம் தேதி அம்பாள் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில், காலை நேர சுவாமி அம்பாள் திருவீதி விழா ரத்து செய்யப்பட்டது. மாலையில் சுவாமி அம்பாள் யில் உட்பிரகாரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடந்து வருகிறது. 2வது ஆண்டாக, விழாவின் 9வது நாளான கடந்த 29ம் தேதி நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. விழாவின் 11வது நாளான நேற்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு ண்பகவல்லி அம்பாள் தபசு காட்சியில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்வேறு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 7 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தபசில் எழுந்தருளிய அம்பாளுக்கு சுவாமி காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மண்டகப்படிதாரர்கள் உட்பட திரளான ள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று (நவ.1ம் தேதி) நடைபெற்றது.