பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே என்றொரு பழமொழி உண்டு. ஆனால் ராமர் ஆட்சி செய்த அயோத்தியில் நடந்த சம்பவம் வியப்பாக இருக்கிறது. அயோத்தியில் வாழ்ந்த நவரத்தின வியாபாரியின் மகள் ஒருத்தி, தன் திருமணத்திற்கு வரும்படி மகாராணி சீதைக்கு அழைப்பு விடுத்தாள். சம்மதித்த சீதை முத்துமாலை ஒன்றை பரிசளித்தாள். ஏராளமான நகைகள் தன்னிடம் இருப்பதால் யாராவது ஏழைகள் எடுத்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் அரண்மனை வாசலில் முத்துமாலையை விட்டுச் சென்றாள். ஆசையே இல்லாத அயோத்தி மக்கள் அதை தொடக் கூட விரும்பவில்லை. நாளடைவில் மாலை மண்ணுக்குள் புதைந்தது.