காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் அவதார திருநாளை முன்னிட்டு, நேற்று கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இரவு தங்க தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் காமாட்சி அம்மன் அவதார திருநாளான ஐப்பசி பூரம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இவ்விழா நேற்று நடைபெற்றது.இதையொட்டி, நேற்று மாலை, காமாட்சி அம்மன் சன்னிதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் இருந்து கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பின் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.இரவு கோவில் உள் பிரகாரத்தில் அம்மன் தங்க தேரில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் கோவில் திருகுளம் அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் அம்மனுக்கு பல வகையான வாசனை மலர் கொண்டு மலர் அபிஷேகம் நடைபெற்றது.