Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து உடுமலை மாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு உடுமலை மாரியம்மன் கோவிலில் தீபாவளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
500 ஆண்டு புராதன கணபதி சிலை சுங்கத்துறை விசாரணை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
500 ஆண்டு புராதன கணபதி சிலை சுங்கத்துறை விசாரணை

பதிவு செய்த நாள்

04 நவ
2021
12:11

 சென்னை:வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிடப்பட்ட, 500 ஆண்டு பழமையான கணபதி சிலையை, சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக வந்த பார்சல்களை, விமான நிலைய சுங்கத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, காஞ்சிபுரத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு உலோக சிலையை அனுப்புவதற்காக, சுங்கத்துறை அனுமதி கேட்டு, ஒரு விண்ணப்பமும், அந்த சிலைக்கான மாதிரியாக சிறிய சிலை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆய்வு செய்த போது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சுங்கத் துறையின் தனிப்படையினர், காஞ்சிபுரத்தில் குறிப்பிட்டிருந்த அந்த முகவரி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

அங்கு, 5.25 அடி உயரத்தில், 130 கிலோ எடையில் உலோக சிலை இருந்தது. அது புதிய சிலை இல்லை என்றும், மிகவும் பழமையானது என்றும் தெரிய வந்தது. சுங்கத் துறையினர் சிலையை பறிமுதல் செய்து, விமான நிலைய சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். மேலும், பழங்கால சிலையை ஆய்வு செய்யும் தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலை, 500 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரிய வந்தது.

பல கோடி ரூபாய்: இந்தச் சிலை, காஞ்சி புரத்தில் உள்ள மிகப் பழமையான கோவிலில் இருந்திருக்கலாம். அதை தற்போது வெளிநாட்டிற்கு பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் சிலையை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்ட ஏஜன்சி, சிலை வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் வீட்டின் உரிமையாளர் உட்பட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar