சூலூர்: உலக மக்கள் நலன் வேண்டி,, பள்ளபாளையம் ஆசிரமத்தில் கோமாதா பூஜை நடந்தது.
சிவராம்ஜி சேவா டிரஸ்ட் சார்பில், பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், ஆண்டுதோறும் கோமாதா பூஜை நடந்து வருகிறது. உலக மக்கள் நலன் வேண்டி, நேற்று முன்தினம் நடந்த பூஜையில், டிரஸ்ட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் கோமாதாவுக்கு பூக்கள் தூவி வழிபட்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கார்மேகம் பேசுகையில்," முப்பத்து முக்கோடி தெய்வங்கள், பசு மாட்டில் உள்ளன. அதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள், பசுவை தெய்வமாக வழிபட்டனர். கோவில்களில் நடக்கும் பூஜைகள், புதிய வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளில் கோமாதா பூஜை நடத்தப்படுகிறது. அதேபோல், உலக மக்கள் நலன் வேண்டி இங்கு கோபூஜை நடத்தப்படுகிறது. நாட்டில் பல்வேறு சேவைப் பணிகள் செய்ய ஏராளமான சகோதரர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும்," என்றார்.