பதிவு செய்த நாள்
05
நவ
2021
04:11
சாத்துார்: சாத்துார் வைப்பற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. எல்லைக்காவல் தெய்வம் கருப்பசாமி கோவில். அங்காளஈஸ்வரி, அய்யனார், முருகன் தெய்வானை, வள்ளி, நாகதேவி, சன்னதிகளுடன் அமைந்துள்ளது. சாத்துார் நகரின் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பசாமி 18ம் படியான் என இப்பகுதியினர் அனைவரும் அழைக்கின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றில் பயங்கர வெள்ளம் வந்தபோது கருப்பசாமியின் சிலையின் சிரசு வரை வெள்ளம் உயர்ந்ததாகவும், கருப்பசாமி யின் அருளால் ஊருக்குள் வெள்ளம் புகாமல் வடிந்துவிட்டதாகவும் பெரியவர்கள் கூறுகின்றனர். சாத்துார் மற்றும் சுற்றுக் கிராம மக்களின் குல தெய்வமாக விளங்கும் கருப்பசாமி குழந்தைகளின் காவல் தெய்வமாக விளங்குகிறார். நடு இரவில் பச்சிளம் குழந்தைகள் திடுக்கிட்டு கதறி அழுதால் காவல்க்காரன் கருப்பசாமியை நினைத்து மஞ்சள் துணியில் நேர்ந்த்து கொண்டு காசு முடித்து வைப்பது வழக்கம். குழந்தைகள் பிறந்த பின்னர் கருப்பசாமி சன்னதியின் பதினெட்டு படியின் முன்பு கிடத்தி தம்பதியர் வழிபட்டு செல்கின்றனர் . சாத்துார் மக்களின் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு 12 ஆண்டு களுக்கு ஒரு முறை கொடைவிழா நடப்பது வழக்கம். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் ஆடு. கோழி, சேவல் அறுத்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.