ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், பெருவயல் ரெணபலி முருகன் கோயில்களில் நேற்று கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் காப்பு கட்டினர். முக்கிய நிகழ்ச்சியாக நவ.,9ல் சூரசம்ஹாரம், நவ.,10ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பெருவயல் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று (நவ., 5ல்) இரவு விநாயகர் பூஜையுடன் அபிஷேக ஆராதனையுடன் காப்புக்கட்டுதல் நடந்தது. இதே போல ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி மற்றும் வழிவிடுமுருகன் கோயில்களில் வேல், மயில், சுவாமிக்கு காப்புக்கட்டினர். பக்தர்களும் கையில் கயிறு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நவ.,9ல் சூரசம்ஹாரம், நவ.,10ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
சாயல்குடி: சாயல்குடி வழிவிடு முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ. 4 காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 5:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. நவ.,9 அன்று மாலை 4:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும்,மாலை 6:30 மணிக்கு சூரசம்ஹார வேலுக்கு சாந்தாபிஷேகம் சிறப்பு தீபாராதனையும் நடக்க உள்ளது.