கவுமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2021 12:11
கம்பம்: க.புதுப்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி, மாவிளக்கு, பொங்கல், அக்னிசட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
க.புதுப்பட்டி கவுமாரியம்மன் கோயில் பிரசித்திபெற்ற சுயம்பு அம்மன் ஆகும். அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி கிராமங்களில் தலா 7 நாட்கள் வீதம் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். அனுமந்தன்பட்டியில் திருவிழா முடிந்தவுடன், அம்மன் சிலை புதுப்பட்டி கோயிலிற்கு கொண்டு வரப்படும். ஒரு வாரமாக ஒவ்வொரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடந்தது. தினமும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். நேற் று முன்தினம் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முல்லையாற்றில் கரை த்தனர். ஒக்கலிக இளைஞர் அணி சார்பில் வண்டிவேஷ நிகழ்ச்சி நடந்தது.