மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே சோழமாதேவி கு ங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகர சுவாமி கோயில் திறந்தவெளி பாராகவும் சுகாதாரக் கேடான பகுதியாகும் மாறியு ள்ளது.
மடத்துக்குளம்தாலுகா சோழமாதேவியில் மிக பழமையானவரலாற்று சிறப்புமிக்க குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசே கர ஸ்வாமி கோவில் உள்ளது.சோழ மன் னர்கள் ஆட்சியில் இந்த கோவில்கற்றளி முறையில் கட்டப்பட்டு, இதனைச் சுற்றி ராணியின் பெயரால் சோழ(ன்)மாதேவி கிராமம் உருவாக்கப்பட்டது.தற்போதும் இந்த கோவிலில் வழிபாடுகள் நடக்கிறது காலை 7 :00மணி தொடங்கி 12 :00மணி வரையும் மாலை 4 :00 மணி தொடங்கி 7:00 மணி வரையும்,தினசரி பூஜைகள் நடக்கிறது.இது தவிர பிரதோஷம், சிவ ராத்திரி,மற்றும் முக்கிய விசேஷ தின ங்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து திரும்பு கின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் பகுதி முறையான துப்புரவு ப ணி செய்யப்படாமல் ரோட்டின் இரண்டு பக்கமும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள ன. இதனால்,இந்தப் பகுதியை குடிமகன் கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகி ன்றனர். அடிப்படை அறிவு குறைவானவ ர்கள் கோவிலை சுற்றி திறந்தவெளி கழி ப்பிடமாக்கியுள்ளனர். இதனால் இந்த ப குதி சுகாதாரக்கேடு நிறைந்துள்ள இடமா க மாறிவிட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் இரவு தொடங்கிய,பின்பு இங்கு யாரும் வருவதில்லை. இதனால் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களில் பலரும் ஈடுபட தொடங்கியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், முகம் சுளிக்கும் இடமாக மாறி பக்தர்கள் வருகை குறையும். வர லாற்றின் அடையாளமாக இந்த கோவில், கவனிப்பின்றி பாழடையும் சூழ்நிலை உருவாகிவிடும்.இதை தவிர்க்க இந்த ப குதி முழுவதும் துப்புரவு பணி செய்ய வே ண்டும் .ரோட்டின் இரு பக்கமும் வளர்ந்து ள்ள புதர்களை வெட்டிஅப்புறப்படுத்த வே ண்டும். கூடுதல்தெருவிளக்குகள் அமை த்து,கண்காணிப்புக்குள்ளான பகுதியாக மாற்ற வேண்டும்." என தெரிவித்தனர்.