கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கட்சி வளர்ச்சிப் பணி குறித்து நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.பின் கொடைக்கானல் திரும்புகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். தாமதமாக கொடைக்கானல் வந்தவர், நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார். சிலவாரங்களில் மீண்டும் கொடைக்கானல் வருவேன். இங்கு அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கூறி கிளம்பினார்.