வாடிப்பட்டி: மதுரை பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா அக்.,26 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காளை, ரிஷப வாகனங்களில் முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காப்பு கட்டிய பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். நவ.,6 இரவு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து விழா கொடி இறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் மற்றும் கிராமமக்கள் செய்தனர்.