ஆலத்தூர் ஹனுமான் கோவிலில் திருவோண மகோற்சவம் நாளை ஆரம்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2021 03:11
பாலக்காடு: ஆலத்தூர் ஹனுமான் கோவிலில் திருவோணம் மகோத்ஸவம் நாளை முதல் ஆரம்பம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ளது புகழ்பெற்ற ஆலத்தூர் ஹனுமான் கோவில். இங்கு எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் மூன்று நாள் கொண்டாடும் திருவோண மஹோத்சவம் நடப்பது வழக்கம். நடக்கும் மகோற்சவம் நாளை (9ம் தேதி) துவங்குகின்றன.
நாளை காலை 4 மணிக்கு கோவில் பள்ளி உணர்த்தல் பிராத கேளி, கணபதி ஹோமம், மலர் நிவேத்தியம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகும் உற்சவம் 11ம் தேதி இரவு 9 மணிக்கு நடக்கும் யானைகள் அணிவகுப்போட நிறைவு பெறுகின்றனர். தந்திரி பிரஹ்மஸ்ரீ கலப்புழா சங்கரன் நம்பூதிரி, கோவில் மேல்சாந்தி அரீக்கரை சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் கோவில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உற்சவ நாட்களில் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் அவல் நிவேத்தியம் நடைபெறும் வந்து போகும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.