பம்பையில் நீராட பக்தர்களுக்கு ஷவர் வசதி: புல்மேட்டு பாதையில் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2021 09:11
திருவனந்தபுரம் : புல்மேட்டு பாதையில் சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்பையில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக, ஆங்காங்கே, ஷவர் வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரவிளக்கு மண்டல பூஜைகள் துவங்க உள்ளன. ஆன்லைனில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். விழாவை பாதுகாப்பாக நடத்துவது பற்றி எருமேலியில் உள்ள தேவசம்போர்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் அதிகாரிகள் கூறியதாவது: புல்மேட்டு பாதையில் கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்; பம்பையில் குளிக்க அனுமதியில்லை. அதேசமயம் பம்பை நீரில் நீராட வசதியாக ஆங்காங்கே ஷவர் வசதிகள் செய்யப்படும். எருமேலியில் நடக்கும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.