திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2021 09:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று (நவ.,9) மாலை 4:00 மணிக்கு பதில் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
இன்று காலை கோயில் நடை வழக்கம்போல் காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, மதியம் 12:30 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 4:30 மணிமுதல் மாலை 5:30 மணி வரை கோயில் திருவாட்சி மண்டபத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று சுவாமி, சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பின்னர் மாலை 6:00 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்து சேர்த்தி செல்வர். இரவு 7:00 மணியிலிருந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.