சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நவ.,11ல் லட்சார்ச்சனை துவங்குகிறது. நவ.,13 மாலை 6.10 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக நவ.,11காலை 10:45க்கு துவங்கி நவ.,13 மதியம் 2.00 மணிக்கு முடிகிறது. இதனைத்தொடர்ந்து குருபெயர்ச்சியை முன்னிட்டு மாலை 3.00 மணி முதல் 6.10 வரை பரிகார மஹாயாஹம், திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நவ.,13ம் தேதி மட்டும் ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.