Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு ... இருகூர் பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இருகூர் பண்ணாரி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத் பூஜை: ஒரு துளி நீர் கூட அருந்தாமல்... கடும் விரதத்துடன் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாத் பூஜை: ஒரு துளி நீர் கூட அருந்தாமல்... கடும் விரதத்துடன் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 நவ
2021
10:11

 திருப்பூர்: திருப்பூரில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்கள், சாத் பூஜை வழிபாடுகளை நடத்தினர்.

பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், சாத் பூஜை ஆண்டுதோறும், தீபாவளிக்கு பின், ஆறாவது நாளில் துவங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த வழிபாட்டில், தண்ணீர் கூட அருந்தாமல், பக்தர்கள் விரதம் இருப்பர்.அவ்வகையில், திருப்பூரில் வசிக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள், சாத் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். போயம்பாளையம், கங்கா நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். கால்வாய் வெட்டி, அதில் தண்ணீரை நிரப்பி, அதற்குள் நின்று சூரியனை வழிபட்டனர்.

அப்பகுதியை சேர்ந்த அஜய்குமார் கூறுகையில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், குடும்பத்தினர் நலமாக வாழ வேண்டியும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்ய வரங்களை கேட்கவும், இந்த சாத் பூஜையை கொண்டாடுகிறோம். தீபாவளி கடந்து ஆறு நாட்களுக்கு பின், இந்த பண்டிகை துவங்கி கொண்டாடப்படுகிறது.பெண்கள் அதிகாலை புனித நீராடி, விரதம் இருந்து, தண்ணீரில் நின்று சூரியனை வழிபட்டோம். அதன்பின், சூரிய பகவானுக்கு, அர்க்கியம் என்ற படையல் வைத்து, நிறைவு செய்தனர் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar