பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி, ஹோமம் மற்றும் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.
இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு நிகழ்வையொட்டி, சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வளர்பிறை, சப்தமி, அஷ்டமி திருவோண நட்சத்திர தினத்தில் காலை விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 17 கலச அபிஷேகம், சாந்தி ஹோமம், தீர்த்த பிரசாதம் மற்றும் பிரசாதம் வழங்கல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஹோமம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மூலவர் பெருமாளுக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடந்தது. மாலையில் திருக்கல்யாண உற்சவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.