திருநகர் : திருநகர் ஸ்ரீநிவாசா நகரிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் நேற்று ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. மூலவர்கள், உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அலங்காரம் முடிந்து உற்ஸவர்கள் ஊஞ்சலில் எழுந்தருளினர். மாலையில் சுவாமி கோயிலுக்குள் புறப்பாடானார்.