பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
11:07
நாமக்கல்: நாமக்கல், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உண்டியலில் மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 873 ரூபாய் மற்றும், 11 கிராம் தங்கம், 62 கிராம் வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது கணக்கிடப்பட்டது. நாமக்கல், தட்டாரத் தெருவில் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் உண்டியல், ஆண்டுக்கு இரு முறை திறந்து, அதில் உள்ள காணிக்கை கணக்கிடப்படும். அதன்படி, கோவில் தக்கார் வரதராஜன், செயல் அலுவலர் சிவராமசூரியன் ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடந்து, அதில் இருந்து காணிக்கை தொகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவை எடுத்து, தனித்தனியாக பிரித்து கணக்கிடப்பட்டது. அதில், காணிக்கை தொகையாக, மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 873 ரூபாயும், தங்கம் 11 கிராம் 200 மி.லி., கிராமும், 62 கிராம் வெள்ளியும் இருந்தது கணக்கிடப்பட்டது. காணிக்கைகள் கணிக்கிடும் பணியில், மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.