பதிவு செய்த நாள்
02
ஜூலை
2012
11:07
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில் கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விஷேச பூஜைகள் நடைபெறும். சித்திரை, ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர்.விழாக்காலங்களில் அரசு சிறப்பு பஸ் வசதி உள்ளது.மலையில் இருந்து வரும் சுனை நீரில் குளித்து, வேலப்பரை வழிபடுவதற்காக அன்றாடம் பலரும் ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு செல்கின்றனர். ஆண்டிபட்டியில் இருந்து 20 கி.மீ.,தூரம் உள்ள கோயில் வளாகம் வரை பஸ் காலை 8.30, மாலை 4.30 மணிக்கு மட்டுமே செல்கிறது. மற்ற நேரங்களில் தெப்பம்பட்டியில் இருந்து எட்டு கி.மீ.<,தூரம் நடந்து செல்ல வேண்டும். அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும். ஆண்டிபட்டியில் இருந்து பாலக்கோம்பைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. இந்த பஸ்சை வேலப்பர் கோயில் பகுதி வரை நீட்டிப்பு செய்தால்,கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்களும் பயனடைவர். போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.