பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் ஆனித்திருவிழா, ஜூன் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமி அம்பாள் ரிஷபம், காமதேனு, சிம்மம், கைலாசம் வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின், 5ம் நாளான நேற்று தவசு மண்டகப்படி, 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. இதையொட்டி, கோவில் மண்டபத்தில் 63 நாதஸ்வரங்கள் மற்றும் தவில் வித்வான்கள் அடங்கிய குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடந்தது. பின்,நாயன்மார்களுடன், சுவாமி நான்கு மாட வீதிகள், தேரோடும் வீதிகளை சுற்றி வந்தது. நாதஸ்வர கச்சேரியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த வித்வான்கள் பங்கேற்றனர். ஜூலை 6 ல் இக்கோவிலில் ஆனி தேரோட்டம் நடைபெறும்.