வில்லியனூர் பெருமாள் கோவிலில் இன்று தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2012 10:07
வில்லியனூர் : வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா நடைபெறுகிறது. வில்லியனூர் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 9ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் 29ம் தேதி கருட சேவையும், 6ம் நாள் உற்சவமாக யானை வாகனத்தில் அலங்கரித்த சுவாமி வீதியுலாவும், நேற்றுமுன்தினம் (1ம் தேதி) இரவு7 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. பொது உற்சவமாக இன்று (3ம் தேதி) தேர் திருவிழா நடக்கிறது. காலை 8.30 மணிக்கு திருக்கோவிலூர் ஜீயர் சீனுவாச ராமானுஜாச்சாரியார் தேர் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். வரும் 5ம் தேதி புஷ்ப பல்லக்கு, 6ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. உற்சவ தினங்களில் காலை 11 மணிக்கு பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் ஹரிஹரிநமோநாராயணா, பிரம்மோற்சவ உபயதாரர் கள் செய்து வருகின்றனர்.