நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: வடம் பிடித்த பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2012 10:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் 508 வது ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி மாதத்தில் பெருந்திருவிழா, ஜூன் 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, ரதவீதிகளில் பவனி நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சுவாமி தேருக்கு முன், அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் புறப்பட்டன. சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் சென்றன. தேரை ஒரே நாளில் நிலையில் சேர்ப்பதற்காக போலீசார், ஊர்க்காவல் படையினர் இணைந்து தேர் இழுத்தனர்.குற்றாலத்தில் துவங்கியுள்ள குளுகுளு சீசனின் தாக்கம் நெல்லையிலும் இருந்ததால், தேரோட்டத்தின் போது வெயில் தெரியாமல் ரம்மியமாக இருந்தது.