திண்டுக்கல்: இயேசு நம்மோடு என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் நற்கருணை பவனி திண்டுக்கல்லில் நடந்தது. யூதர்களிடம் இயேசு பிடிபடுபவதற்கு முன் தனது சீடர்களுக்கு இறுதி விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். கோதுமை வடிவத்திலான அப்பத்தை எடுத்து இது என் உடல் என்பதை என்றென்றும் நினைவுகூறுங்கள் என்றார். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திருப்பலியில், அப்பமும், திராட்சை ரசமும், இயேசுவின் உடலாகவும், ரத்தமாகவும் கிறிஸ்தவர்களால் நினைவுகூறப்படுகிறது. இதன் மூலம் "இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் திண்டுக்கல்லில் நற்கருணை பவனி நடத்தப்படுகிறது. சப்-கலெக்டர் ஆபிஸ் ரோட்டில் உள்ள புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருப்பலியும், அதை தொடர்ந்து நற்கருணை பவனி துவங்கி, புனித வளனார் பேராலயத்தில் நிறைவு பெற்றது.