சதுர்முக முருகன் கோயிலில் திருக்கார்த்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2021 05:11
சின்னாளபட்டி: திருக்கார்த்திகையை முன்னிட்டு சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி, விசேஷ யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரத்துடன் மகா அபிஷேகம் நடந்தது. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.