சபரிமலை: சபரிமலையில் நடந்த கார்த்திகை விழாவில் தீப ஒளியில் சன்னிதானம் ஜொலித்தது. கோயில் முன்புறம் உள்ள கிழக்கு மண்டலத்தில் நெய் விளக்கில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தீபம் ஏற்றியதும், சன்னிதான சுற்றுப்புறங்களில் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஓம் வடிவிலும், சரணம் ஐயப்பா என்ற வடிவிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. ஐயப்பனுக்கு அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. சன்னிதானம் கற்பூர ஒளியில் ஜொலித்த போது கூடியிருந்த பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர்.