பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
ராஜபாளையம் : ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிபெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. கடந்த மாதம் 24ல் கோடியேற்றத்துடன் விழா துவங்கியது. காலை, மாலையில் சுவாமி, அம்மன், சப்பரம், வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஒன்பதாம்நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு கோயில் நிலையத்தில் இருந்து கோபால்சாமி எம்.எல்.ஏ., வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தக்கார் குருநாதன், நிர்வாக அதிகாரி வேல்முருகன் முன்னிலை வகித்தனர். தேவாரம், திருப்புகழ் பாடல்களை அடியார்கள் பாடினர். சுவாமி பெரிய தேரில், அஞ்சல்நாயகி அம்மன் சிறிய தேரில் பவனி வந்தனர். காலை 10.55 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊர்காவல் படை, அஷ்டயோக பைரவர் அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் பேரவை சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன. மதியம் அன்னதானம் நடந்தது. வில்லியம் பிரான்சிஸ் பெஸ்கி டி.எஸ்.பி., வடக்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜா, மற்றும் போலீசார், ஊர்காவல் படையினர் கண்காணிப்பு பணி செய்தனர்.