பதிவு செய்த நாள்
03
ஜூலை
2012
10:07
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின், ஜூலை 5 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இளையான்குடி, ஆயிர வைசிய சபையினர் சார்பில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் அலங்கார மண்டபம் , மகா மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் நடந்து, கும்பாபிஷேக பணிகள், ஜூலை 2 காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று ஜூலை 3 காலை9.30 மணிக்கு 2 ம் கால யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு 3 ம் காலயாகசாலை பூஜை, இரவு 8.30மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. ஜூலை 4 அன்று காலை 9 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு 5 ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. ஜூலை 5 அன்று காலை 5.50 மணிக்கு 6ம் கால யாகபூஜை, 8 மணிக்கு ஹோபூஜையும், 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அன்று காலை 9 - 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். அன்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிஷேகம், இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். கோயில் அறங்காவலர்கள், ஆயிர வைசிய சபையினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.