பதிவு செய்த நாள்
20
நவ
2021
03:11
கோவில்பட்டி: திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் சப்த மகா தீபாராதனை நடந்தது. மேலும், தெப்பக்குளத்தில் 1008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து , புண்ணியாகவாசனம் நடந்தது. பின்னர், சப்த நதி நீரை கும்பத்தில் வைத்து கும்ப பூஜை நடந்தது. பின்னர், கும்பத்தை கோயிலில் இருந்து எடுத்து வந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். இதையடுத்து, தெப்பத்தில் தீர்த்த அபிஷேகம் மற்றும் புஷ்பம் தூவும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, சப்த மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக, தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர்கள், படிக்கட்டுக்கள் என தெப்பக்குளத்தைசுற்றிலும்1008 திருவிளக்குகள் ஏற்றப்பட்டன. ஏற்பாடுகளை இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், பா.ஜ., வடக்கு மாவட்டத் தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் பாலு, முனியசாமி, வினோத்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.