மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருக்கல்யாணம், தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2012 10:07
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள இந்து சமய அற நிலையத்துறைக்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரமோற்ஸவ விழா ஜூன் 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் நடந்த நிகழ்ச்சியில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்தாம் நாளில் திருக் கல்யாணம் நடந்தது. மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. வைகைச்செல்வன் எம்.எல்.ஏ., தொழில் அதிபர் தினகரன், அ.தி.மு.க., பிரமுகர் சங்கரலிங்கம் உட்பட பலர் வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக நிலையை அடைந்தது. நேற்று 12 ம் நாள் தீர்த்தவாரியுடன் விழா முடிவடைந்தது.