திருக்கனூர் : செட்டிப்பட்டு சித்தி விநாயகர், நல்லாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி நடக்கிறது. திருக்கனூரை அடுத்துள்ள செட்டிப்பட்டு சித்தி விநாயகர் கோவில், நல்லாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது. வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு சித்தி விநாயகர் கும்பாபிஷேகம், 10.15 மணிக்கு நல்லாத்தம்மன் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.