பழநி : சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டு, பழநியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறு விடுமுறையான நேற்று ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களின் வருகையும் அதிகமாக இருந்தது. இழுவை ரயில் (வின்ச்), ரோப்கார் ஸ்டேஷனில் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பக்தர்கள் வருகையால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.