திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா ஆகியோர் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில், நன்கொடை தொடர்பான கல்வெட்டு ஒன்றை கண்டனர்.அவர்கள் கூறியதாவது: இக்கல்வெட்டு 167 கிராம 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை கட்டடத்தின் உட்புறத்தில் அமைந்துள்ளது.இந்த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் 26 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. 4 அடி உயரம், ஒரு அடி அகலமும் கொண்டுள்ளது.இக்கல்வெட்டு சென்னை கந்தன் செட்டியாரும், மனைவி ஜித்தம்மாளும் இணைந்து 1914 ஜூன் 5ல் கிணறு வெட்ட வழங்கிய தர்மம் தொடர்பானது.ஓய்வுபெற்ற தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது. கிரிவல பயணத்தின்போது பொதுமக்கள் நலனுக்காக குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், குளிக்கவும் கிணறு நிர்மாணித்திருக்க வேண்டும் என்றனர்.